

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் காகா 3 விக்கெட்டுகளும், மலபா, டி கிளெர்க், டிரையன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
298 ரன்னை இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து, 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நாடின் டிகிளெர்க், தீப்தி சர்மா பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.