பூமிக்கு வெளியே கண்டறியப்பட்ட அதிசயப் பொருள்.

பூமிக்கு வெளியே கண்டறியப்பட்ட அதிசயப் பொருள்.
Published on

பூமியில் அதிகமாகக் காணப்படும் பாஸ்பரஸ் என்ற வேதிப்பொருள், தற்போது பூமிக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அது கண்டறியப்பட்ட இடம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. 

மனித இனம் கடந்த சில ஆண்டுகளாகவே வேற்று கிரக வாசிகள் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. நிலவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் முதல் செவ்வாய் கிரக  ஆராய்ச்சிகள் வரை, அனைத்துமே வேற்று கிரகவாசிகளைத் தேடும் முயற்சியின் ஒரு அங்கம்தான். நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பறந்து விரிந்த விண்வெளியில் ஏதாவது ஒரு மூலையில் சின்ன உயிரினம் இருக்காதா என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வுகள் செய்து வந்தாலும், அவர்களால் இதுவரை ஒரு சின்ன உயிரினத்தைக் கூட பூமிக்கு வெளியே அதிகாரப் பூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

பாஸ்பரஸ் என்ற வேதிப்பொருள் பூமியில் அதிகமாக காணப்பட்டாலும், அது பாஸ்பேட் வடிவில் கண்டுபிடிக்கப்படுவது அரிதானதாகும். நமது மனித DNA-வின் முதுகெலும்பாக இந்த பாஸ்பேட் தான் இருக்கிறது எனலாம். பெர்லின் பல்கலைக்கழகம், நாசாவின் Cassini ஸ்பேஸ் மெஷின் இணைந்து சனி கிரகத்தின் நிலவில் இந்த பாஸ்பேட்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி சமீபத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. 

வெள்ளி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Enceladus-ல், உறைந்த நிலையில் இருக்கும் கடலில் இந்த பாஸ்பேட் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஏன் இத்தனை ஆச்சரியமாகக் கூறுகிறார்கள் என்றால், இதுதான் மனித DNA வின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஆதாரமாக இருக்கிறதாம். எலும்புகளின் ஒரு பகுதி மற்றும் செல் சவ்வுகள் போன்றவற்றை இதுதான் உருவாக்குகிறது. 

பூமியில் இருப்பதைவிட 1000 மடங்கு பாஸ்பரஸ் அங்கே இருக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாசாவின் காசினி மிஷன், சனி கிரகத்தின் வளையங்கள் மற்றும் அதனுடைய நிலவுகளை ஆய்வு செய்து வருகிறது. இதுதான் அங்கே பாஸ்பரஸ் இருப்பதைக் கண்டுபிடித்தது. ஏற்கனவே 2020 இல் வெள்ளி கிரகத்தில் மேகங்களில் 'பாஸ்பைன்' வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு வீனஸ் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறது என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் அது தொடர்பான இரண்டாவது கட்ட ஆய்வில், பாஸ்பைன் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது மீண்டும் பாஸ்பைன் வாயு அங்கே இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வெள்ளி கிரகத்தில் உள்ள மேகங்களில் ஏதாவது உயிரினங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் பாஸ்பைன் பூமியில் உயிரியல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய மூலக்கூராகும். இதனால் வெள்ளி கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பூமியில் அதிகம் காணப்படும் ஒரு பொருள் பூமிக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளதால், விஞ்ஞானிகளுக்கு இடையே இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com