தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு!

தொழிலாளர் வருங்கால வைப்பு    நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இபிஎஃப்ஓ தற்போது உள்ள வட்டி விகிதமான 8.1 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப் .பட்டுள்ளது.

இபிஎப்ஓ 2016-17 ஆம் ஆண்டில், சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டியும், 2017-18 ஆம் ஆண்டில், 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது.

அதன் பிறகு இபிஎஃப்ஓ (EPFO) வின் வட்டி விகிதம் கடந்த 2018-19ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டு 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்க அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்த வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டு, 8.1%ஆக நிர்ணயிக்கப்பட்டது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎப்ஓ வட்டி விகிதத்தை அறிவிக்கும்.

PF
PF

அப்போதும் வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள EPFO அலுவலகத்தில் அந்நிறுவன அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில் தற்போது உள்ள வட்டி விகிதமான 8.1 சதவீதத்தில் இருந்து, 8.15 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்கும் சுமார் 7 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com