ரம்ஜான் நோன்பு கால பணி நேர சலுகை ! மம்தா பானர்ஜி அதிரடி!

ரம்ஜான் நோன்பு கால பணி நேர சலுகை ! மம்தா பானர்ஜி அதிரடி!
Published on

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித்துறையின் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானது ரமலான் எனப்படும் ரம்ஜான்.உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் அனைவரும், ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். 

ரம்ஜான் மாதம் தொடங்கியதால் இஸ்லாமியர்கள் உணவு, நீர் உட்கொள்ளாமல் உண்ணா நோன்பு கடைபிடித்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் சோர்வடைவதை காண முடியும். எனவே மாலை நேரங்களில் தங்களது பணிகளில் இருந்து, சற்று முன்னதாக வீடு திரும்ப இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரம்ஜான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரை வேலை நேரத்திற்கு முன்னதாகவே, பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி, மேற்கு வங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித்துறையின் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜியின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com