
உலகின் பிரதான உணவாகவும், அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவாகவும் உள்ள பிரியாணி குறித்துப் பார்ப்போம்.
பிரியாணி இல்லாமல் ஒரு ஆடம்பரமான உணவை தேர்வு செய்வது என்பது முடியாத காரியம். 1398 ஆம் ஆண்டு பாரசீகம் நாட்டில் உருவான பிரியாணி நாடு கடந்து, எல்லைகள் கடந்து ஒவ்வொரு மண்ணுக்கும் ஏற்றார் போல ருசியில் மாற்றத்தை ஏற்படுத்தி தன்னைத் தகவமைத்துக் கொண்டு பாரம்பரிய, கலாச்சார உணவாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளின் பிரதான உணவு வகையாக பிரியாணிய கருதப்படுகிறது.
அசைவ பிரியர்களுக்கான விருந்தில் பிரியாணி இல்லாத மெனுவே இடம்பெறாது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக பிரியாணி மாறி இருக்கிறது. ஏன் உலகம் முழுவதும் உள்ள அசைவக் கடைகளில் அதிகம் விற்பனையாவது பிரியாணியே.
இந்தியாவின் முக்கியமான உணவாக மாறி இருக்கும் பிரியாணி இந்தியாவில் பாரம்பரிய, கலாச்சார உணவாக தற்போது உருவெடுத்து இருக்கிறது. காலமாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு புதுமைகளையும் பிரியாணி தனக்குள் புகுத்தி வருகிறது. இவ்வாறு மூங்கில் பிரியாணி, இளநீர் பிரியாணி, மண்பானை பிரியாணி, மீன் பிரியாணி என்று பல்வேறு புதிய வகைகள் நாளுக்கு நாள் பிரியாணியில் உருவாகி வருகிறது.
மேலும் குறிப்பாக இந்தியாவில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, பிஷ் பிரியாணி, காளான் பிரியாணி, பிரான் பிரியாணி, பனீர் பிரியாணி மற்றும் ஹைதராபாத், ஆம்பூர், திண்டுக்கல், தலசேரி, இனாம்குளத்தூர், மலபார், லக்னோ, கோன் என்று பல்வேறு வகையான பிரியாணி பிரபலமானவை.
இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகளின் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது பிரியாணியே. ஏன் மதுரையில் உள்ள முனியாண்டி கோவிலில் பிரியாணி முக்கிய படையலாக உள்ளது. இது மட்டுமல்லாது உணவுகளை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமோடோ நிறுவனங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளில் முதல் இடத்தில் பிரியாணியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகையான பிரியாணியை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது.