சினிமா...சினிமா...சினிமா!

நேஷனல் சினிமா தினம் - செப்டம்பர் 23
cinema
cinema

தேசிய சினிமா  தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் செப்டம்பர் 16 ஆம் தேதி யன்று கொண்டாட இருந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் வேண்டுகோளின் படி ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேஷனால் கொண்டாடப் படவிருக்கிறது .

இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த தேசிய சினிமா தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.300/- விலையுள்ள டிக்கெட்டுகள் ரூ.75/- என்ற சிறப்பு சலுகை விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 4000 த்திற்கு மேலான திரையரங்குகள் தடபுடலாக தயாராகி வருகிறது. அதில் உலக சினிமாக்களை கண்டுகளிக்கும் விதமாக பல்வேறு மத இன  பாரம்பரியங்களை கொண்ட உலக சினிமாக்கள் ரசிகர்கள் வசதிக்காக திரையிடப் படவிருக்கிறது.

தேசிய சினிமா தினத்தில் பங்கேற்கும் முண்ணனி திரையரங்குகளான பிவிஆர் சினிமாஸ் , ஐநாக்ஸ், கார்னிவல், மிராஜ், முக்தா சினிமாஸ், மூவிடைம், சினிபோலீஸ் , வேவ் போன்ற நிறுவனங்கள் இந்த தேசிய திருவிழாவிற்காக சிறப்பாக தயார்ப்படுத்தி வருகின்றது. சினிமா ரசிகர்கள் உலக சினிமாக்களை கண்டு களிக்கலாம்!!!. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com