உலக முதியோர் தினம்
உலக முதியோர் தினம்

உலக முதியோர் தினம் (Oct 1)

Published on

உலக முதியோர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக முதியோர் தினம் கொண்டாடப்படுவதே இதன் முக்கிய நோக்கம் .

முதியோர் நலன் குறித்தது 1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி தீர்மானம்: 45/106 என்பது முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதியோர் தினம்
முதியோர் தினம்

அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும் மற்றும் அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். முதியோர்கள் சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.

இந்த முதியோருக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. இந்த விதிமுறைகள் முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் காக்கப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வாழ்நாளை கழிக்க வழிவகை செய்வது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

logo
Kalki Online
kalkionline.com