உங்கள் நினைவுகள் மறைந்து போகலாம், ஆனால் படங்கள் என்றென்றும் அப்படியே இருக்கும். புகைப்படங்கள் கடந்த காலத்தை உங்களுக்கு நினைவூட்டுவது மட்டுமல்லாமல், பலவிதமான உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளன. இதன்காரணமாகதான் ஒவ்வாரு ஆண்டும் உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் புகைபடங்களை கிளிக் செய்யும் கலையை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறந்த புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை ஒப்புக்கொள்வதுடன், இந்தத் திறமையை உலகுக்குத் தூண்டிய புகைப்படக் கலையின் முன்னோடிகளுக்கு மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள். கடந்த கால நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினர் ஒப்புக் கொள்ளும் வகையில் படம்பிடிப்பதில் புகைப்படக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது.
புகைப்பட தினம் எப்படி உருவானது?
1837 ஆம் ஆண்டில், பிரெஞ்சுக்காரர்களான லூயிஸ் டாகுரே மற்றும் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் ஆகியோர் டாகுரோடைப் எனும் புகைப்பட முறையை முதல் முறையாக கண்டுப்பிடித்தனர். டாகுரோடைப் என்பது ஒளி-உணர்திறன் மேற்பரப்பில் நிரந்தர படங்களை கைப்பற்றுவதற்கான முறையாகும். இதன்மூலம் ஒளியை உள்வாங்கி படங்கள் எடுக்கும் முறை கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து , ஜனவரி 9, 1839 இல், பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்சஸ் டாகுரோடைப் முறையை அறிவித்தது மற்றும் ஆகஸ்ட் 19 அன்று, பிரெஞ்சு அரசாங்கம் இதற்கான காப்புரிமையைப் பெற்றது. அதன்பின்னர், தன்னுடைய காப்புரிமை முறையை "உலகிற்கு இலவச பரிசு" என்று அறிவித்தது. அதனால்தான் ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்றைய தினம் 184வது ஆண்டு உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் பல தினங்கள் கொண்டாடப்பட்டாலும் ஒரு நூற்றாண்டை கடந்து இரண்டாவது நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு தினம் என்றால் அது உலக புகைப்பட தினமாகதான் இருக்கமுமுடியும். என் நண்பர்களே இன்றைய தினம் ஒரு கிளிக் எடுத்து மகிழ்ந்திருப்பீர்கள் தானே!