உங்களுக்கு நாய்களை பிடிக்குமா.. அப்போ நீங்கள் இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும்!

செப் 28 உலக ரேபீஸ் தினம்
உங்களுக்கு நாய்களை பிடிக்குமா.. அப்போ நீங்கள் இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும்!

திகாலம் முதல் மனிதனுடன் நன்றியுணர்வோடு பழகும் ஒரு விலங்கு என்றால் அது நாய்கள்தான். ஆனால், அதேசமயம் பெரும்பாலும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபீஸ் நோய்த்தொற்று பற்றி தெரிந்துக்கொள்வது அவசியமாகும்.

மக்களை அன்று முதல் இன்று வரை அச்சத்தில் ஆழ்த்தும் வெறிநாய்க்கடி என்று அழைக்கப்படும் ரேபீஸ் வைரசுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளரான லூயிபாஸ்டர் மறைந்த தினமான செப்டம்பர் 28 ஆம் தேதி உலக ரேபீஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ரேபீஸ் தொற்றின் பாதிப்பு

ரேபீஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நபருக்கு மூளைபாதிப்பு , உடலின் மைய நரம்பு மண்டலம் பாதிப்பு , கடுமையான காய்ச்சல் ,வலிப்பு , தாங்க முடியாத தலைவலி ,மூச்சுத்திணறல் போன்றவைகளுடன் உயிர் சேதமும் ஏற்படும் வாய்ப்புண்டு.

நாய்கள் மட்டுமே ரேபீஸ் வைரசைப் பரப்பும் என்பதில்லை. காட்டில் வாழும் சிலவகை வௌவால்கள்,  நரி,  ஓநாய் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பூனை , குதிரை ஆகிய விலங்குகளுக்கும்  இந்த வைரஸ் தாக்குதல் உண்டு.

வைரஸ் தொற்றுபாதிக்கப்பட்ட இந்த விலங்குகளிடம் கடிபடும் போதோ அதனுடன் நெருக்கமாக முத்தமிட்டு கட்டியணைத்து அதன் உமிழ்நீர் படும்படி அதனுடன் பழகும்போதும் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உண்டு.

பெரியவர்களை விட நோயெதிர்ப்பு சக்தி குறைந்த சிறிய வயதுடையவர்கள் ஆபத்தை அறியாமல் அவற்றின் வாய்க்குள் கைகளை விட்டுக் கொஞ்சுவது கட்டிப்பிடித்து தூங்குவது போன்றவற்றால் அதிகம் பாதிப்பை அடைகிறார்கள். என்னதான் செல்லப் பிராணி என்றாலும் சற்று இடைவெளியுடன் பழகுவது நல்லது.

மேலும் இந்த வைரசினால் பாதிக்கப்படாமல் இருக்கும் நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கட்டாயம் தடுப்பூசிகள் போடுவது அவசியம்.

தற்போது ரேபீஸ்க்கான மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு பெருகியுள்ளது வரவேற்கத்தக்கது .எனினும் தொற்று அறிகுறிகள் சிறிய அளவில் தென்பட்டாலும் வீட்டு வைத்தியங்கள் போதும் என்று நாள் கடத்தாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது. பிராணிகளிடம் அன்பு செலுத்துதல் நன்று .அதை விட அவற்றிடம் எச்சரிக்கையாக இருப்பதும் மிக நன்று ..  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com