உலகின் அரிதான தங்க கவசவால் பாம்பினம் ! 142 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு !

மண்ணுளிப் பாம்பு
மண்ணுளிப் பாம்பு

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களைக் கொண்டிருக்கும் இந்த பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் இன்றளவும் அறியப்படாத உயிரினங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரியவகை பாம்பினமான தங்கக் கவசவாலன் எனும் விஷமற்ற மண்ணுளி இனம் ஒன்று 142 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டுள்ளது. இந்தப் பாம்பு குறித்து ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்பு
பாம்பு

மண்ணுளிப் பாம்பு மருத்துவ குணம் மிகுந்தது, பல கோடி ரூபாய் வரை விற்பனை ஆகும் என்று சில கும்பல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. மண்ணுளிப் பாம்பு புற்றுநோயை குணமாக்கும், ஹைச்.ஐ.வி-க்கு மருந்து என பல தகவல்கள் உலவி வருகிறது. இருதலை மணியன் என அழைக்கப்படும் விஷத்தன்மையற்ற மண்ணுளி பாம்பை இனங்களும் உலகில் காணப்படுகின்றன .

உலகில் 8 வகையான மண்ணுளி பாம்புகள் உள்ளன. இவற்றில் தங்க கவசவால் பாம்பினம்(Golden shieldtail) மிக அரிதாகவே காணப்படுகின்றன. ரிச்சர்டு ஹென்றி என்பவரால் 1800-ம் ஆண்டு முதல் முதலில் இந்தப் பாம்பு கண்டறியப்பட்டது என்கிறார்கள் பாம்புகள் குறித்த ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com