ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்
ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு 116 கோடி ரூபாய் நஷ்ட ஈடு!

ஹாலிவுட்டின் பிரபல ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு ஜானி டெப் எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தன் மனைவி இப்படி வழக்குப் பதிவு செய்ததாக பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜானி டெப் நிரபராதி என்றும் அவரது முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்கூறி தீர்ப்பு அளித்தது.

அத்துடன் ஜானி டெப் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் நஷ்ட ஈடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயுமாக மொத்தம் 116 கோடி ரூபாயை ஜானி டெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com