90 சதவீத மொபைல் வழி இணைப்புகளில் 2 எம்பிபிஸ் வேகம் ஓக்லா ஆய்வறிக்கையில் தகவல்

90 சதவீத மொபைல் வழி இணைப்புகளில் 2 எம்பிபிஸ் வேகம் ஓக்லா ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியா முழுவதும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஓக்லா நிறுவனம் எடுத்த ஆய்வறிக்கையில் 5ஜி இணைப்பு கிடைத்த பின்னர் மொபைல் வழி இணைய சேவையில் 2 எம்பிபிஸ் வேகம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. 5ஜி இணைப்பால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆய்வறிக்கையின் முடிவுகள் நம்பிக்கை தந்திருக்கின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு பற்றி குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகளுக்கு பின்னர் கூட அண்டை நாடுகளான நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளை விட பின்தங்கியிருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் முக்கியமான பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு தரும் பணிகள் ஆரம்பமாகின. அதைத்தொடர்ந்து 4ஜி இணைப்புகளும், அதன் வேகமும் படிப்படியாக சீர்படுத்தப்பட்டன. கொரானா பரவல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் கோடிக்கணக்கான மக்கள் மொபைல் மூலமாக இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

5ஜி மூலமாக இந்தியாவில் சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் மட்டுமே பெறமுடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக மாறிப்போய், இந்தியாவின் சராசரி இணைய வேகம் 20 எம்பிபிஎஸ்ஸை கடந்திருக்கிறது. ஆனாலும், மொபைல் வேகத்தில் மாற்றம் இருக்காது என்று சொல்லப்பட்டது.

இணைய வேக குறியீட்டு பட்டியலில் உலக அளவில் இந்தியா 118வது இடத்தில் இருந்தது. 5ஜி முழுமையாக அமலுக்கு வந்ததும் பட்டியலில் முன்னேற ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது சாத்தியமாகிவருகிறது. ஊக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ஆய்வில் 90 சதவீத மொபைல் இணைப்புகளில் குறைந்தபட்ச வேகமான 2 எம்பிபிஎஸ்ஸை பெற முடிந்திருக்கிறது.

2021 ஆண்டின் இறுதிவரை 76 சதவீத மொபைல் இணைப்புகளில் மட்டுமே 2 எம்பிபிஎஸ் இணைய வேகம் இருந்தது. 2022ல் இதுவே படிப்படியாக உயர்ந்து, தற்போது 92.5 சதவீத மொபைல் இணைப்புகளில் 5ஜியின் குறைந்தபட்ச வேகமான 2 எம்பிபிஎஸ் என்பது சாத்தியமாகியுள்ளது.

இதன் மூலம் அத்தியாவசிய பணிகளை மொபைல் மூலமாக செய்துவிட முடியும். டெலிபோன் பில், மொபைல் பில், ஈ.பி பில் போன்றவற்றின் கட்டண பரிவர்த்தனைகளை லேப்டாப் மூலமாகவே மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது மொபைல் மூலமாக அனைத்தையும் செய்து முடிக்குமளவுக்கு வேகம் இருக்கிறது.

2 எம்பிபிஎஸ் இணைய வேகம் என்று ஒன்பது ஆண்டுகளாக தொடர்நது எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி எனலாம். 5ஜி அமலுக்கு வந்த

பின்னர் இணைய வேகம் மட்டுமல்ல தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் மேம்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

5ஜி இணைப்புகள் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சேவைகளை சுறுசுறுப்பாக்கியிருக்கிறது. ஆனால், இன்னும் நஷ்டத்தில் இயங்கவதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து டிராய்க்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின்னர் சேவை கட்டணங்களில் மாற்றம் இருக்கப்போவது நிச்சயம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com