குளத்தில் நீந்தும்போது நீர்யானையிடமிருந்து தப்பிய 3 சிறுவர்கள்!

குளத்தில் நீந்தும்போது நீர்யானையிடமிருந்து தப்பிய 3 சிறுவர்கள்!

பெரிய நதிகளிலோ அல்லது ஆறுகளிலோ குளிக்கச் செல்பவர்கள் நீச்சல் அடிக்கும்போது சற்று கவனமாக இருப்பார்கள். ஏனெனில் குளத்தில் சுறாமீன்கள் அல்லது முதலைகள் இருக்கும். இவற்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு இருக்கும். அதனால் நதிகளில் குளிக்கும்போது ஆழமான பகுதிகளுக்குச் செல்லமாட்டார்கள்.

ஆனால், நீர்யானையால் ஆபத்து ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் நீர்யானை குட்டியாக அழகாக இருக்கும். தண்ணீருக்குள் இருந்தாலும் அது ஒன்றும் செய்யாது. அதுபாட்டுக்கு தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், நீர்யானையை நேருக்கு நேர் தண்ணீரில் சந்திக்கும்போது தான் அதனால் ஏற்படும் ஆபத்து என்ன என்பது நமக்குத் தெரியும். நீருக்குள் விளையாடும் நீர்யானை மனிதர்களை பார்த்தால் சில விநாடிகளில் பிடித்து விழுங்கிவிடும்.

இது தொடர்பாக பழைய விடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மக்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த விடியோ காட்டுகிறது. ஒரு குளத்தில் மூன்று சிறுவர்கள் இறங்கி குளித்து, நீச்சலடித்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நீர்யானையைக் கண்டு திகிலடைந்து பயந்து போனார்கள்.

இந்த விடியோ ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது. மூன்று சிறுவர்களும் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு சில அடி தூரத்தில் தண்ணீரிலிருந்து எழுந்தது நீர்யானை. அதைப் பார்த்ததும் சிறுவர்கள் அலறினார்கள். இந்த காட்சிகளை விடியோ எடுத்த நபரும் பயத்தில் ஓடினார்.

2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த விடியோவை “சான் வைல்டு சாங்சுவரி” தனது முகநூலில் வெளியிட்டுள்ளது. மூன்று சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்த இடத்துக்கு நீர்யானை திடீரென வந்தது. உடனே சிறுவர்கள் அலறினார்கள். நல்ல வேளையாக நீர்யானை ஒரு பக்கமும் சிறுவர்கள் மற்றொரு பக்கமும் சென்றதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இல்லையெனில் அந்த நீர்யானை அவர்களை விழுங்கியிருக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நீர்யானைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த விடியோ காட்டுகிறது அவை எப்போது எப்படி செயல்படும் என்று தெரியாது.

இப்படித்தான் உகாண்டாவில் 2 வயது குழந்தையை நீர்யானை விழுங்கியது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் துப்பிவிடவே அந்த குழந்தை உயிர் தப்பியது. அந்த குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்குவந்த நீர்யானை தனது வாயால் கவ்வியது. அந்த குழந்தையின் தந்தை செய்வதறியாமல் நீர்யானையின் மேல் கற்களை வீசினார். உடனே அந்த நீர்யானை குழந்தையை தனது நீண்ட வாயிலிருந்து துப்பிவிட்டு ஓடிவிட்டது.

நீர்யானை மனிதர்களை விழுங்கினால் நிமிடங்களில் உடல் இரண்டு துண்டாகிவிடும். அத்தகைய வலிமை கொண்டவை அவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com