2023 ல் உலகை ஆளப்போகும் 5 புதிய நிறங்கள்! - ஃபேஷன் உலகத்தின் அறிவிப்பு!

2023 ல் உலகை ஆளப்போகும் 5 புதிய நிறங்கள்! - ஃபேஷன் உலகத்தின் அறிவிப்பு!

பரவலாகப் பலரும் அறிந்த நிறங்கள் என்றால் அவை வானவில்லில் இருக்கும் ஏழு வண்ணங்களே.

ஆனால், ஃபேஷன் உலகில் இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு புதுமைகளை நிகழ்த்திக் காட்ட முடியாது. எனவே இந்த நிறங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் மேலுமென புதுப்புது வண்ணங்களை உருவாக்கித் தள்ளிக் கொண்டிருப்பார்கள் அவர்கள்.

உலகின் முன்னணி கன்ஸ்யூமர் ட்ரெண்டு ஃபோர்காஸ்டிங் நிறுவனமான WGSN, கலரோ (Coloro) வுடன் கூட்டணி அமைத்து நடத்திய சர்வேயில் தெரிய வந்தது நிகழ் ஆண்டில் கீழக்கண்ட ஐந்து நிறங்கள் தான் லைஃப்ஸ்டைல், இண்ட்டீரியர், டெக்னாலஜி, பியூட்டி, ஃபேஷன் என அனைத்து தரப்பிலும் ஆதிக்கம் செலுத்தவிருக்கிறது என.

இதற்கான சர்வேயில் கலரோ தன்னிடமிருந்த 3,500 கலர் டோன் கலெக்ஷன்கள் அடங்கிய வண்ணச் சேர்க்கையைப் பயன்படுத்தியதாகத் தகவல். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிறமும் தேர்ந்த எக்ஸ்பர்ட்டுகளின் தீவிரமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இந்த நிறங்களைத்தான் மக்கள் விரும்பக்கூடும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் லாவண்டர்

லஸ்ஸியஸ் ரெட்

சன் டயல் (காவியில் ஒரு வகை)

ட்ராங்குயில் ப்ளூ

வெர்டிக்ரிஸ் (பச்சை நிறத்தில் ஒருவகை)

மேற்கண்ட ஐந்து நிறங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான ‘கலர் ஆஃப் தி இயர்’ எனும் சிறப்புத் தகுதியைப் பெற்ற நிறமாக டிஜிட்டல் லாவண்டரைக் குறிப்பிடுகிறது (WGSN)

இந்த ஐந்து நிறங்களுமே அதை விரும்பக்கூடிய மக்களின் எதிர்பார்ப்புகளை முன்னிட்டே தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன, கோவிட் பேண்டிமிக் காலகட்டத்துக்குப் பின் உலகம் முழுவதுமே மக்கள் நிம்மதியான பாதுகாப்பான சூழலை எண்ணிக் கனவு காணத் தொடங்கினார்கள். அந்தக் கனவைப் பூர்த்தி

செய்யும் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் டிஜிட்டல் லாவண்டர் கலர் செயல் படுகிறது. எனவே இதையே கலர் ஆஃப் தி இயர் 2023 என அறிவித்திருக்கிறது உலகின் முன்ணனி கன்ஸ்யூமர் ஃபோர்காஸ்டிங் நிறுவனமான WGSN.

கடந்த ஆண்டு கலர் ஆஃப் தி இயராக வெர்டிகிரிஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்டேட்டுகளை முன் வைத்தே ஃபேஷன் உலகம் இயங்கி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com