500 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமேசான் நிறுவனம்!

500 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமேசான் நிறுவனம்!

உலகின் முன்னணி டெக்னாலஜி சேவை நிறுவனமான அமேசான் லாபம் தான் முக்கியம் என ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்த நிலையில் 6 மாதத்தில் 2 அறிவிப்புகளில் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனத்தின் சிஇஓ-வான Andy Jassy கூறினார்.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளை வேகப்படுத்தி வந்த நிலையில் Andy Jassy 2வது முறையாக மார்ச் மாதம் அறிவித்த 9000 பேர் பணிநீக்க அறிவிப்பில் சுமார் 500 பேர் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர். எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித முழு தகவலும் இல்லை.

எனினும், இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

மேலும் புதிதாக பணியாளர்களை சேர்க்கும் எண்ணம் இல்லாத காரணத்தால் ஹெச்ஆர் பிரிவில் இருந்து அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் .

இதேவேளையில் அமேசான் தளத்தில் 2வது தர நகரங்களான கொச்சி, லக்னோ போன்ற பகுதிகளில் புதிய செல்லர்களை சேர்ப்பதை அமேசான் நிறுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் பிளிப்கார்ட், மீஷோ என பல ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உடன் கடுமையான போட்டிப்போட்டு வருகிறது. இதற்கு மத்தியில் பொருளாதார மந்தநிலை காரணமாக வர்த்தகம் குறைந்து செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com