அமெரிக்கா முன்னாள் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை!

அமெரிக்கா முன்னாள் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை!

உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இது வரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

தற்போது வரை உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப் படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com