டிவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்த மாதம் ரூ. 660 கட்டணம்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

டிவிட்டர் ‘புளூ டிக்’ பயன்பாட்டுக்கு இனி மாதம் ரூ.660 கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடியாக  அறிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை சமீபத்தில் விலைக்கு வாங்கினார். அதையடுத்து அவர் டிவிட்டரில்  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் டிவிட்டரில் ‘புளூ டிக்’ பயன்பாட்டுக்கு இனி மாதம் ரூ.660 கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டிவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர்.

இது அவர்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டிவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டிவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிலையில், டிவிட்டர் ‘புளூ டிக்’ பயன்படுத்துவதற்கு இனி மாதம் 8 டாலர் (ரூ. 660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் தன் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 மேலும் இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது;

டிவிட்டரில் இனிமேல் பிரபலங்கள் மட்டுமல்லாது தனிநபர்களும்கூட மாதாந்திர கட்டணம் செலுத்தி புளூ டிக் வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே இந்த புளூ டிக் வசதி வைத்திருப்போருக்கு மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com