அனுப்பியவர் மற்றும் பெறுபவர் இருவரின் மரணத்துக்குப் பின்னர் 30 வருடங்கள் கழித்து வீட்டுக்கு வந்த கடிதம்!

அனுப்பியவர் மற்றும் பெறுபவர் இருவரின் மரணத்துக்குப் பின்னர் 30 வருடங்கள் கழித்து வீட்டுக்கு வந்த கடிதம்!

மின்னணுப் புரட்சியில் இப்போது எல்லாம் ஒருவருக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றால் நொடியில் அது பரிமாறப்பட்டு பார்க்கவும் படிக்கவும் முடிகிறது. ஒரு காலத்தில் தொலைவில் வாழ்பவர்களுக்குக் கடிதங்கள் அவர்களது உறவுகளை வளர்ப்பதற்கு ஆதாரமாக இருந்தன. கடிதத்தின் வரவு சந்தோஷத்தையோ அல்லது முக்கியமான விஷயத்தையோ தாங்கி வரும். கடித இலக்கியம் என்பது ஒரு பிரிவாக போற்றப்பட்டது. ஜவஹர்லால் நேரு இந்திரா காந்திக்கு அனுப்பிய கடிதங்கள் படிப்பவர்களுக்குப் பாடம் புகட்டுபவை.

அனுப்பப்படும் ஊரின் தொலைவைப் பொறுத்து கடிதம் பட்டுவாடா செய்யப்படும். சில சமயங்களில் கடிதப் போக்குவரத்துகள் சில நாள்கள் ஆகும். ஆனால் வருஷங்கள் கடந்து ஒரு கடிதம் எதிர்பாராமல் வந்தால்?

சமீபத்தில் இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்டைச் சேர்ந்த ஜான் ரெயின்போ என்பவருக்கு 1995 இல் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று வந்தது.

இணையத்தின் சகாப்தம் எழுவதற்கு முன்பு மக்கள் தொடர்பு கொள்ளக் கடிதங்களைப் பயன்படுத்திய நேரங்கள் இருந்தன. ஆனால் இன்று அப்படியொரு காட்சியைக் நம்மால் காண முடியாது.

அதனால்தான் ஜான் ரெயின்போவுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு டெலிவரி ஆகியிருக்க வேண்டிய கடிதம் தற்போது வழங்கப்பட்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஒரு எதிர்பாராத டெலிவரியில், ஜான் ரெயின்போ 1995 இல் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தைப் பெற்றார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதம் வீட்டின் இதற்கு முந்தைய குடியிருப்பாளரான வலேரி ஜார்விஸ்-ரீட் என்பவருக்கு அனுப்பப்பட்டதாக ரெயின்போ தெரிவித்தார்.

ரெயின்போ தனது மனைவியுடன் 2015 ஆம் ஆண்டு முதல் வைலமில் வசித்து வருகிறார். அந்தக் குறிப்பிட்ட கடிதம் 1880-ல் நடந்த குடும்பக் கதைகள், குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் எழுத்தாளரின் குழந்தைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை பற்றிய குறிப்புகள் அதில் எழுதியுள்ளதாக கூறுகிறார் ரெயின்போ.

கடிதம் வேறு சில இடுகைகளுடன் வந்ததாகவும், முதலில் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

முதலில் அதை அவர் கிறிஸ்மஸ் கார்டு என்று நினைத்தார் ஆனால் அது ஒரு கடிதம் என்பதை விரைவில் உணர்ந்தார். கடிதம் சரியான நிலையில் இருந்தது, ஆனால் கொஞ்சம் பழையதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

2010 ஆம் ஆண்டு வரை அவரது வீட்டில் வேலரி ஜார்விஸ்-ரீட் வசித்ததாகவும், அதன் பிறகு அந்த வீடு பல கைகள் மாறியதாகவும் ரெயின்போ கூறினார்.

இது இப்படி இருக்க, எவ்வளவு வருஷமானால் என்ன கடிதம் சரியான இடத்திற்குதானே வந்துள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com