மசூதி கோபுரம்
மசூதி கோபுரம்

இந்தோனேசியாவில் சரிந்து விழுந்த மசூதி கோபுரம்!

இந்தோனேசியாவில், ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் தீ விபத்து ஏற்பட்டு அந்த மசூதியின் கோபுரங்கள் இடிந்து விழும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட  தீவிபத்து காரணமாக மசூதி கோபுரம் மளமளவென எரிய தொடங்கி, இடிந்து கீழே விழுந்தன.

மசூதி கோபுரம் இடிந்து விழும்போது அப்பகுதியின் சாலைகளில் நெருப்பு துண்டுகள் பறந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர்  தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயைக் கட்டுகுள் கொண்டு வந்தனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.  மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று  தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com