அமைதி புரட்சி வெடிக்கும்; சூளுரைத்த லுலா டா சில்வா பிரேசில் அதிபராக வெற்றி!

லுலா டா சில்வா
லுலா டா சில்வா

பிரேசில் நாட்டில் அராஜகத்துக்கு எதிராக அமைதிப் புரட்சி வெடிக்கும் என்று சூளுரைத்த லுலா டா சில்வா, அந்நாட்டு தேர்தலில் தற்போதைய அதிபர் போல்சனாரோவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கெனவே  2 முறைரேசில் அதிபராக பதவி வகித்த லுலா டா சில்வா, இப்போது 3-ம் முறையாக பிரேசில் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரேஸில் அதிபர் தேர்தல் நேற்று (அக்டோபர் 30) நடைபெற்றது. இதில் தர்போதைய அதிபர் ஜேர் போல்சொனாரோவுக்கும் இடதுசாரி வேட்பாளர் லூலா டா சில்வாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

லூலா 2010-ல் அதிபராக இருந்தபோது, அவரது தொழிலாளர் கட்சி ஊழல் மோசடிகளில் சிக்கியதையடுத்து அவர் பதவி விலகினார். ஆனால் பிரேசிலை பொருளாதார மந்தநிலையில் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்டு, லூலா 2018-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றும் அந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை அவருக்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் அந்த தடையை அந்நாட்டு உச்சநீதி மன்றம் 2021-ல்  ரத்து செய்தது, அதையடுத்து பிரேசிலில் இந்த தேர்தலில் லூலா போட்டியிட்டார்.  உலகம் கண்டிராத மிகப்பெரிய அமைதிப் புரட்சியை நடத்தி ஜேர் போல்சோனாரோவை தோற்கடிப்பேன் என்று லூலா சபதம் செய்தார்.

அந்த வகையில் நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கடைசி வரை யார் பிரதமராக போகிறார் என்பது புதிராகவே இருந்தது. இறுதியாக  மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் லூலா டா சில்வா வெற்றி பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com