பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நியூசிலாந்தில் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிறிய அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனினும், ரிக்டர் அளவுகோளில் மிகக் குறைந்த அளவிலேயே பதிவான இந்த நிலநடுக்கங்களை பெரும்பாலான மக்கள் உணரவில்லை.
இதையடுத்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 8.30 மணியளவில் நியூசிலாந்தில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 8.1-ஆக பதிவான இந்த நிலடுக்கத்தின் தாக்கம், நியூசிலாந்தில் அதிக அளவில் உணரப்பட்டது. வீடுகள், அலுவலகங்களில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறினர். சாலைகளில் சென்ற பல்வேறு வாகனங்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தன. இதில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. பல நெடுஞ்சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிகக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, நியூசிலாந்தில் கடற்கரை அருகே உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நாடான வனோட்டு, பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியான நியூ கேல்டோனியா ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவாகி இருந்தததால் இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் லேசான சுனாமி உணரப்பட்டது. கடலில் 1.5 அடி அளவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானது. இதன் மூலம் மேலும் சுனாமி உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது