நியூசிலாந்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2!

நியூசிலாந்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2!

நியூசிலாந்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம், கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது.

நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கை மண்டலத்தின் விளிம்பிலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நியூசிலாந்தில் வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் பதறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com