இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

இந்தோனேசியா நிலநடுக்கம்!
இந்தோனேசியா நிலநடுக்கம்
இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுவன் 2 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவில், (ரிக்டர் அளவில் 5.6 ) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். படுகாயமடைந்த 700க்கும் மேற்பட்டவர்களுக்கு சாலையோரங்களிலேயே முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

Earth Quake
Earth Quake

இந்த நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 5,300க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் The National Disaster Management Agency தெரிவித்திருக்கிறது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பெரும்பாலானோர் இன்னும் மீட்கப்படாமல் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.

மீட்புப் பணியில் இருந்த உள்ளூர் தன்னார்வலர் ஒருவர் , ``நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான Cugenang-ல் இடிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, இடிபாடுகளுக்கு இடையே இறந்த பாட்டியின் உடல் அருகில் சிறுவன் ஒருவன் இருந்தான். இந்த பேரிடர் நடந்து 48 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் தான் நாங்கள் சிறுவன் அஸ்கா மௌலானா மாலிக்கை மீட்டோம். சிறுவன் இறந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டு தான் அவனை தூக்கினோம். ஆனால், அவன் உயிருடன் இருந்தான்.

இன்னும் பலர் உயிருடன் போராடிக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் மீட்புப் பணியை இன்னும் துரிதப்படுத்தியிருக்கிறோம் " எனத் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com