நைஜீரியாவில் பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி!

நைஜீரியாவில் பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் ரயிலும், பயணிகள் பஸ்ஸும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நைஜீரியாவில் லாகோஸ் நகரில் பயணிகளை ஏற்றியபடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் செல்லும் வழியில் ரயில் தண்டவாளம் இருந்ததால், ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து சென்றுவிடலாம் என எண்ணி, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

இந்த கோர சம்பவத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்ஸில் இருந்து 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com