ஆப்கன் மதரசா பள்ளியில் குண்டு வெடிப்பு! 16 மாணவர்கள் பலி!

ஆப்கன் மதரசா பள்ளி
ஆப்கன் மதரசா பள்ளி

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் வந்த பிறகு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களும் பெண்களுக்கெதிரான கொடுமைகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் தலிபான்கள் வந்த பிறகு, 1996 முதல் 2001 வரை அதிகாரத்தில் இருந்த போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருக்காது என உறுதியளித்தனர். ஆனால் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை விடுத்த கோரிக்கைகளையும் தலிபான்கள் நிராகரித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வந்த பிறகு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் புதிய பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Bomb
Bomb

ஆப்கானிஸ்தானில் வடக்கு சமங்கன் என்கிற மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். ,மேலும் பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிய குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com