59 ஆண்டுகளுக்குப் பின் வானில் அதிசயம்: பூமிக்கு அருகே வியாழன்!

Jupiter
Jupiter

59 ஆண்டுகளுக்கு பின் இன்று பூமிக்கு மிக அருகில் வியாழன் கோள் வரவுள்ளதாக அமெரிக்க நாசா விண்வெளித்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

நமது சூரிய குடும்பத்தின் மிகப் பெரியதான வியாழன் கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது 59 ஆண்டுகளுக்கு பின் இன்று ஏற்படவுள்ளது. இதற்குமுன் இதேபோன்ற சந்தர்ப்பம் 1963-ல் நிகழ்ந்தது.

மேலும் இன்று நிகழவுள்ள இந்த வானியல் அதிசயத்தை சாதாரண பைனாக்குலர் மூலமாக பார்க்கலாம். மேலும் வியாழனின் துணைக் கோள்கள் சிலவற்றையும் காண முடியும்.

இன்றிரவு பூமிக்கு கிழக்கு திசையில் வியாழன் கோள் பிரகாசமாக தென்படும்.

-இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com