அட்சய திருதியை நெருங்கிவிட்டது:  தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி எகிர்கிறது. இது எதனால் தெரியுமா?

அட்சய திருதியை நெருங்கிவிட்டது: தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி எகிர்கிறது. இது எதனால் தெரியுமா?

ட்சய திருதியை என்பது வளர்ச்சியைக் குறிக்கும். அன்று எந்த பொருள் வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என பலரும் நம்புகிறார்கள். இதனாலையே அட்சய திருதியை நாளில் மக்கள் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஆண்டு முழுவதும் பணத்தை சேர்த்து அட்சய திருதியை அன்று மொத்தமாக தங்கத்தை வாங்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஆண்டு வருகிற 22ஆம் தேதி அட்சய திருதியை நாள் கொண்டாடப் படவிருக்கும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்துகொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 6000 ரூபாயை நெருங்கிவிட்டது. 

தங்கத்தின் விலை ஏன் உயர்கிறது?

மெரிக்க சந்தையிலே தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகமாக இருந்துவருகிறது. மேலும் துருக்கி, ரஷ்யா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி சேமிக்கத் தொடங்கியுள்ளன. இதில் ரஷ்யாவும் சீனாவும் தான் அதிகமாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள். தங்களிடம் கையிருப்பில் இருக்கும் டாலர்களை விற்று தங்கமாக வாங்கி வருகிறார்கள். ஏனென்றால் சமீபத்தில் தான் அமெரிக்கா, ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றப்போவதாக அறிவித்தது. எங்கே இந்த நிலை நமது நாட்டிற்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில், டாலர்களை அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் அதை விற்று தங்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். 

எப்போது ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்து, இருப்பு குறைவாக இருக்கிறதோ, அப்போது அதன் விலை ஏறக்கூடும். பெரும்பாலான நாடுகள் தங்கத்தை வாங்கி விடுவதன் காரணமாக தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் உள்ளது. அனைத்து நாடுகளும் இணைந்து தங்கத்தை வாங்கும் அளவு தற்போது மொத்தம் 100 டன்களாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே 100 டன் வரை வாங்கியுள்ளனர்.

இந்த போட்டியின் காரணமாகவே தங்கத்தின் விலை தற்போது அதிகரிக்கிறது. உலக நாடுகள் எப்போது தங்கத்தை வாங்கும் அளவு குறைகிறதோ அப்போது தங்கத்தின் விலையும் குறையும். 

தற்போது அட்சய திருதியையும் நெருங்கி வருவதால், உள்ளூரில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இந்த சூழலில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com