பாகிஸ்தானை டிஷ்யூ பேப்பராக அமெரிக்கா பயன்படுத்துகிறது; இம்ரான் கான்!

prime minister imran khan
prime minister imran khan

 பாகிஸ்தானில் ஊழல் விவகாரத்திலும் சொத்துக்குவிப்பு விவகாரத்திலும் சிக்கியுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், விமரிசித்திருக்கிறார். அதில் பிரதமர் மோடியை ஊழலற்றவர் என்று பாராட்டியுள்ளார்.

 நவாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமரிசித்துத் தெரிவித்ததாவது:

 நவாஸ் ஷெரீப் போல உலகின் எந்தவொரு அரசியல் தலைவரும் இத்தனை பில்லியன்களில் சொத்துக்களை அயல்நாட்டில் குவித்து வைத்திருக்க மாட்டார்கள்.

நம் அண்டை நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அயல்நாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கிறாரா? நவாஸ் ஷெரீப் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இந்தியர்கள் சுயமரியாதை மிக்கவர்கள், இந்தியாவை எந்த சூப்பர் பவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியா பெரும் வள்ர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா உள்ளிட்ட சூப்பர் பவர்கள் டிஷ்யூ பேப்பர் போல் பயன்படுத்தித் தூக்கி எறிகின்றனர்.

இதைச்சொல்லும் போது நான் அமெரிக்க எதிரி அல்ல ஆனால் நம்மை அவ்வாறு சூப்பர் பவர் பயன்படுத்துவது நம் இறையாண்மை மீதான தாக்குதல் என்பதை உணர வேண்டும்.

-இவ்வாறு இம்ரான் கான் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com