லான்ஸ் பெர்ரி
லான்ஸ் பெர்ரி

அமெரிக்க ஆஸ்கர் நடிகை தூக்கத்தில் மரணம்!

அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களின் பிரபல நடிகை மற்றும் ஆஸ்கர் விருது வென்றவருமான நடிகை  லான்ஸ் பெர்ரி, நேற்றிரவு தூக்கத்திலேயே காலமானார். நடிகை லான்ஸ் பெர்ரி இன்னும் 4 நாட்களில் தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில்  இப்போது காலமானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை லான்ஸ்பெரி அமெரிக்காவில் 1984 முதல் 1996-ம் ஆண்டு வரை வெளியான 'மர்டர், ஷி ரைட்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். அந்த வகையில் சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது, 6 கோல்டன் குளோப் விருதுகள், 5 டோனி விருதுகளையும் லான்ஸ் பெர்ரி பெற்றுள்ளார்.

 நடிகை லான்ஸ்  பெர்ரி 'மர்டர், ஷி ரைட்' தொலைகாட்சி தொடருக்கு, ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3 லட்சம் டாலர் சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது தாத்தா ஜார்ஜ் லான்ஸ்பரி 1930-ம் ஆண்டுகளில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர். அவரது தாயார் மொய்னா மேக்கும் திரைத்துறையில் நடிகையாக வலம் வந்தவர்.

நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நட்சத்திர அந்தஸ்துடனே மறைந்த லான்ஸ்பெரிக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com