140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம் ; பிஜி நாட்டின் உயரிய விருதினை பெற்ற மோடி உருக்கம்!

140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம் ; பிஜி நாட்டின் உயரிய விருதினை பெற்ற மோடி உருக்கம்!

பிஜி நாட்டின் பிரதமரான சிடிவேனி ரபுகா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “பிஜி நாட்டின் உயரிய விருதினை” வழங்கி கௌரவித்தார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பிஜி குடிமகனில்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வெளிநாடு சென்ற மோடிக்கு உயரிய விருதினை வழங்கி கௌரவித்து உள்ளார்கள் .

பப்புவா நியூ கினியாவில் இன்று நடைபெறும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிஜி நாட்டின் பிரதமரான சிடிவேனி ரபுகா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த “பிஜி நாட்டின் உயரிய விருதினை” வழங்கி கௌரவித்தார்.

பிஜி நாட்டினை சாராத மிகச் சிலருக்கே இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் இந்திய பிரதமர் மோடிக்கு இந்த சிறப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த விருது குறித்து பிரதமர் மோடி “ இது தனிப்பட்ட எனக்கு வழங்கப்பட்ட கௌரவம் அல்ல.., 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் பிஜி’ என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி பிஜி நாட்டுப் பிரதமர் கவுரவித்திருக்கிறார். இதுவரை பிஜி நாட்டு குடிமகன்களாக இல்லாத ஒரு சிலரே இந்த கவுரவத்தினை பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

இந்த கவுரவத்தினை இந்திய குடிமக்கள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளுக்கு முக்கிய பங்காற்றிவரும் பிஜி - இந்திய சமூகங்களைச் சேர்ந்த தலைமுறையினருக்கும் பிரதமர் மோடி சமர்ப்பிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com