ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்
ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்; பணிந்தது அரசு!

ஈரானில் 'ஹிஜாப்' அணிய எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, அந்த நாட்டின் கலாசார காவல் படைப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்நாட்டுப் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிவது கட்டாயம். சில மாதங்களுக்கு முன், ஹிஜாப் அணியாததற்காக மாஸா அமினி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஈரானில் பெரும் பெண்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல விளையாட்டு வீரர்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்கள் பின்பற்றப் படுவதையும் ஹிஜாப் அணிவதையும் கன்காணிக்க ஏற்படுத்தப்பட்ட கலாசார காவல் படைப் பிரிவை கலைப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இது, தங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டுப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com