மரத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்த பாகுபலி கரடி!

மரத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்த பாகுபலி கரடி!
Published on

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் உள்ள டிராவர்ஸ் சிட்டியின் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் மரத்தின் மீது ஏறி இறங்க முடியாமல் தவித்த 158 கிலோ எடை கொண்ட பாகுபலி கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பஞ்சு மெத்தையின் மீது விழசெய்தனர்.

டிராவர்ஸ் சிட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரடி ஒன்று நுழைந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த கரடி வாகனங்களின் வருகையால் அங்கிருந்த மரத்தின் மீது ஒன்றில் ஏறிக்கொண்டது. மரத்தின் மீது விறுவிறுவென ஏறிய கரடியால் மீண்டும் கீழே இறங்க முடியாமல் மரத்தின் கிளைகள் மீது நடக்கத் தொடங்கியது.

இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், டிராவர்ஸ் சிட்டியில் உள்ள கரடியை பிடிக்கக் கூண்டு, மயக்க மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் விரைந்தனர். மரத்தின் மீதேறிய கரடியை வனத்துறை கீழே இறக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டபோதும் கரடி மரத்தின் கிளைகள் மீதிருந்து இறங்காமல் அங்கே படுத்து உறங்கத் தொடங்கியது.

இதனை அப்பகுதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் மரத்தின் மீதிருந்த கரடியை இறக்க வனத்துறையில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒரே ஒரு மயக்க ஊசி 158 கிலோ எடை கொண்ட பாகுபலி கரடியின் உடலில் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. இதனால், மருத்துவர்களின் ஆலோசனையோடு நான்கு மயக்க ஊசிகள் கரடியின் மீது செலுத்தப்பட்டது. இதனால், மயக்கமடைந்த கரடி தரையில் வனத்துறையினர் விரித்து வைத்திருந்த பஞ்சு மெத்தையில் தொப்பென்று விழுந்தது.

மயக்க நிலையிலிருந்த கரடியை கூண்டில் அடைக்கப்பட்டு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. மரத்தின் மீதேறிப் பல மணிநேரம் போக்குகாட்டி வந்த பாகுபலி கரடி ஒருவழியாகப் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com