அமெரிக்காவில் 2 முக்கிய வங்கிகள் திவால்! ஜோ பைடன் பணத்திற்கு உத்தரவாதம்!

அமெரிக்காவில் 2 முக்கிய வங்கிகள் திவால்!  ஜோ பைடன் பணத்திற்கு உத்தரவாதம்!

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து 48 மணிநேரத்தில் 2 முக்கிய வங்கிகள் திவாலாகியுள்ளது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் ஆகிய இரு வங்கிகள் 48 மணிநேரத்தில் திவாலாகியுள்ளது.

சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு மற்றும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் உடன் திவாலாகியிருக்கும் வேளையில், ஞாயிற்றுக்கிழமை திவாலாகியுள்ள Signature Bank சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் தொகையை கொண்டு திவாலாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நிதியியல் சந்தை மீது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியதை தொடர்ந்து, பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஞாயிற்றுக்கிழமை பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் சரிவுக்கு பின்பு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கி தோல்விக்கு காரணமானவர்களை முழு பொறுப்பு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். வங்கி வீழ்ச்சிக்கு பின்பு வங்கி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்க அமெரிக்க அரசு தொடர்ச்சியான அவசர நடவடிக்கைகளை அறிவித்தது வருகிறது.

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் ஆகிய இரு வங்கிகள் 48 மணிநேரத்தில் திவாலாகியுள்ளது. இதனால் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான டெபாசிட்கள் இவ்விரு வங்கிகளிலும் முடங்கியுள்ளது. இதில் பெரும்பாலான பணம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடையது.

அமெரிக்க சட்ட விதிமுறைகள் படி டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையாக 250,000 டாலர் மட்டுமே பெற முடியும், இது அமெரிக்கா வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்பதை உணர்ந்த அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அனைத்து தரப்பினர் வயிற்றில் பாலை வார்த்தது.

பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும் இதனால் மீண்டும் இந்த நிலையில் உருவாகாது என நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஜோ பைடன் கூறினார்.

இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் அவர்களின் அனைத்து வைப்புத் தொகைகளுக்கும் அணுகவும் வெளியேற்றவும் முடியும் என அறிவித்துள்ளனர்.இதன் மூலம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முழுமையாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த உத்தரவாதம் அனைத்தும் சிலிக்கான் வேலி பேங்க் மட்டும் தான், சிக்னேச்சர் பேங்க் குறித்து இனி தான் முடிவு எடுக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com