ட்விட்டருக்கு போட்டியாக வருகிறது ப்ளு ஸ்கை!

ப்ளுஸ்கை
ப்ளுஸ்கை
Published on

ட்விட்டரின் முன்னாள் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, ட்விட்டருக்கு போட்டியாக ப்ளூஸ்கை னற் மாற்றாக புதிய சமூக தளத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 27-ம் தேதி எலான் மஸ்க் வாங்கினார். இந்நிலையில் 2015-ம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி  2021-ல், ட்விட்டரிலிருந்து பதவி விலகி, புதிய செயலியை உருவாக்கத் தொடங்கினார். இப்போது அச்செயலி முழுமை அடைந்துள்ளதாக டோர்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

'ப்ளூ ஸ்கை' என்பது எல்லையற்ற பரந்து விரிந்த வானத்தைக் குறிக்கிறது. அதுபோலவே எங்கள் ப்ளூ ஸ்கை செயலியும் எல்லையற்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்ற நெறிமுறை (AT புரோட்டோகால்) எனப்படும் கூட்டமைக்கப்பட்ட சமூக வலைப்பின்னலைப் பயன்படுத்தும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களால் ஹோஸ்ட் செய்யப்படுகிறது. இதுவரை மக்கள் பயன்படுத்தும் எல்லா சமூக ஊடகங்களுக்கும் போட்டியாக ப்ளூ ஸ்கை இருக்கும். இச்செயலியின் அடிப்படை சோதனைகள் முடிந்து விட்டது. எனினும் பலதரப்பட்ட பயனர்கள் பயன்பாட்டுக்கு வர இருப்பதால் செயலியை மேம்படுத்த, நெறிமுறை சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயலி வெளியானதும், டிவிட்டருக்கு மாற்றாக அமையும்.

-இவ்வாரு ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com