பாகிஸ்தானில் மனிதவெடிக்குண்டு தாக்குதல்  9 போலீசார் பலி!

பாகிஸ்தானில் மனிதவெடிக்குண்டு தாக்குதல் 9 போலீசார் பலி!

பாகிஸ்தானில் நடந்த மனித வெடிக்குண்டு தாக்குதலில் 9 போலீசார் பலியாகி உள்ளனர். மேலும் 15 போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த மனித வெடிக்குண்டு தாக்குதலுக்கு பலூசிஸ்தான் முதலமைச்சர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் போலீசாரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பாகிஸ்தானில் தற்போது பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. எனினும் இந்த மாதிரியான குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது நிலைமையை இன்னும் மோசமாக்க கூடியது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பாகிஸ்தானில் சமீப காலமாக பல்வேறு தாக்குதல்கள் அதிகரித்து வருவது பெரும் கவலை தரக்கூடியது . சமீபத்தில் மசூதி ஒன்றிலும் போலீஸ் தலைமை அலுவலகத்திலும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிட்டத் தக்கது. பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் பணி முடிந்து ஒரு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வந்து கொண்டிருந்த வாகனம் மீது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மோட்டர் சைக்கிளில் வந்தவர் தனது உடலில் வெடிக்குண்டுகளை கட்டிக்கொண்டு மோதியதாக தெரிகிறது.

இது குறித்து உயர் அதிகாரி அப்துல் ஹாய் ஆமீர் கூறுகையில், போலீசார் வந்த வாகனம் மீது மனித வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் தன்மீது வெடிக்குண்டுகளை கட்டிகொண்டு வாகனம் மீது மோதியுள்ளார். இதில் போலீசார் வந்த வாகனம் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த மனிதவெடிக்குண்டு தாக்குதலில் 9 போலீசார் பலியானார்கள். மேலும் 15 போலீசார் படுகாய மடைந்துள்ளனர். படுகாய மடைந்த போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com