58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையான பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையான பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய 58 வயதில் எட்டாவது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக அவரின் மனைவி கேரி சைமண்ட்ஸுன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

58 வயது நிரம்பிய போரிஸ் ஜான்சன், ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், அவர் தனது காதலியான கேரி சைமண்ட்ஸுனை திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின்னர், இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தன்னுடைய மூன்றாவது திருமணத்தை கேரி சைமண்ட்ஸுன் செய்துகொண்டார்.

பின் 2021-ம் ஆண்டு இவர்களுக்கு ரோமி என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் கையில் பிடித்தபடி, ஒரு புகைப்படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார். கடந்த எட்டு மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். மீண்டும் அண்ணன் ஆகப்போவதில் வில்ஃப் குஷியாக உள்ளார். ரோமியும் அடுத்து என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதில் ஆர்வமாக உள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சனுக்கும் அவரது முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். பிறகு அவரது காதலி ஹெலனுக்கு ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் போரிஸ் ஜான்ஸன் – கெர்ரி தம்பதிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, அவரது எட்டாவது குழந்தையாகும். சமீபத்தில் போரிஸ் ஜான்ஸன், 9 படுக்கையறைகள் கொண்ட கடற்கரையோர பங்களாவை வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், எட்டாவது குழந்தை பிறக்கப்போவதாக போரிஸ் ஜான்ஸன் – கெர்ரி தம்பதிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, 54 வயதான நடிகையான பிரிகிடி நெல்சன் கடந்த 2018ம் ஆண்டில் ஐந்தாவது குழந்தைக்கு தாயாரானர். அப்போது, அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்கள் குழந்தை பெற்றுகொள்வது அவர்களின் உடல் நலத்திற்கு தீங்கு என்ற கோணத்தில் பல பிரிகிடியை விமர்சித்து வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நாளிதழுக்கு பேட்டி அளித்த பிரிகிடி, "பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை விமர்சிப்பவர்கள், 60 முதல் 70 வயதுள்ள ஆண்கள் தந்தையாவது பற்றி ஏன் விமர்சிப்பதில்லை? அப்போது மட்டும் குழந்தை பெற்றுக் கொள்வது தனிமனித விருப்பம், சுதந்திரம் என்று ஒதுங்கிக் கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், இது அனைவருக்கும் பிடிக்காது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் இது என்னுடைய வாழ்க்கை, எனக்கும், என் கணவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது, குழந்தை பெற்றுக் கொள்வது, வளர்ப்பது பற்றி நாங்கள் இருவரும் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

சமீபத்தில் தமிழில் வெளியான, வீட்ல விசேஷம் படத்திலும், ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது என அழுத்தமாக சொல்லப்பட்டது. இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என்பது பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் விஷயத்தில் புரிந்துகொள்ளவேண்டியதாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com