வீட்டின் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட எருமைகள்!

வீட்டின் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட எருமைகள்!
Published on

இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் நகரில் எங்கிருந்தோ வந்த எருமைக்கூட்டம் அருகில் இருந்த பண்ணை வீட்டில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது. அருகில் உள்ள பால் பண்ணையிலிருந்து இவை தப்பி வந்திருக்கலாம் என பி.பி.சி. செய்தி தெரிவிக்கிறது.

நீச்சல் குளத்தில் எருமைகள் ஆனந்த குளியல் போடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனந்தகுளியல் போட்டு, அந்த இடத்தை நாசம் செய்து ரூ.25 லட்சம் சேத்த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பண்ணை வீட்டில் ஆண்டி மற்றும் லினெட் ஸ்மித் என்னும் ஓய்வுபெற்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் சுமார் 18 எருமைகள் கூட்டமாக வந்து வேலியை உடைத்துக் கொண்டு, செடிகளை நாசம் செய்து ஆனந்த குளியல் போட்டுள்ளது. பின்னர் அவை தீயணைப்புத்துறை அதிகாரிகள் உதவியுடன் விரட்டி அடிக்கப்பட்டன. எனினும் நீச்சல் குளத்தை சேதப்படுத்தியதால் அந்த தம்பதிகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்துள்ளது என்றாலும் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீச்சல் குளம் பகுதியில் மர்ம ஆசாமிகள் ஊடுவாமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர நீச்சல் குளத்தை சுற்றி அழுக்காக செடிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், எருமைக் கூட்டம் வந்தபோது மின்வேலி வேலை செய்யவில்லை. இதையடுத்து வேலியை உடைத்துக் கொண்டு, அங்கிருந்த செடிகளை நாசம் செய்து எருமைகள் உள்ளே நுழைந்து நீச்சல் குளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டுள்ளன.

“தேநீர் தயாரிப்பதற்காக மனைவி சமையலறைக்குச் சென்றபோது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது 8 எருமைகள் நீச்சல் குளத்தில் வெயிலுக்கு இதமாக லூட்டியடித்துக்கொண்டிருந்தன. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் இதை புரளி என நினைத்த தீயணைப்பு படையினர் பின்னர் வந்து உண்மை நிலையை அறிந்து எருமைக் கூட்டத்தை விரட்டி அடித்தனர். அதில் ஒரு எருமை ஜாக்கெட் அணிந்து வந்த தீயணைப்பு வீர்ர்களை கண்டவுடன் கோபத்தில் முட்டுவதற்கு முயன்றது” என்றார் ஆண்டி ஸ்மித்.

நல்ல வேளையாக அந்த நீச்சல் குளத்தை இன்சூரன்ஸ் செய்திருந்ததால் சேதமடைந்த்தற்கான இன்சூரன்ஸ் தொகை அவர்களுக்கு கிடைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com