85 ஆண்டுகளுக்கு பிறகு பனிப்பாறையில் மீட்கப்பட்ட  கேமரா!

பனிப்பாறையில் மீட்கப்பட்ட  கேமரா
பனிப்பாறையில் மீட்கப்பட்ட  கேமரா

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் பிராட்ஃபோர்ட் வாஷ்பர்ன் என்பவரது கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் 85 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கனடாவின் யூகோன் பனிப்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிராட்ஃபோர்ட் வாஷ்பர்ன் என்பவர் அமெரிக்க பாஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் நிறுவனர், புகைப்படக் கலைஞர், வரைபடக் கலைஞர் மற்றும் இயக்குநராக இருந்தார். மலை ஏறுவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், அவற்றை படம் பிடித்து சேகரித்து வந்தார்.

அந்த வகையில் 1937-ம் ஆண்டு வாஷ்பர்ன், மற்ற மூன்று மலையேறுபவர்களுடன் 17,145 அடி உயரத்தில் உள்ள கனடாவின் 3-வது உயரமான சிகரமான லூகானியா மலையின் ஏற முயற்சி மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக தொடர்ந்து மலை ஏறுவதில் சிரமம் ஏற்பட, வாஷ்பர்ன் உள்ளிட்ட மலையேற்ற வீரர்கள் தங்களது கேமரா மற்றும் உபகரணங்களை அப்படியே விட்டுவிட்டு தரையிறங்கினர்.  அந்த உபகரணங்கள் பனியால் மூடப்பட்டு விட்டன.

தற்போது 85 ஆண்டுகள் கழித்து, தற்போது ஸ்போர்ட்ஸ் வீடியோ தயாரிப்பாளர்களான டெட்டன் கிராவிட்டி ரிசர்ச் தலைமையிலான குழு அந்த மலைக்கு சென்று பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின் கேமராக்கள் மற்றும் மலையேற்ற உபகரணங்கள் மீட்டெடுத்துள்ளன.

85 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகள் எப்படி இருந்தன என்பதை இந்த கேமரா படங்களின் மூலம் அறிய முடியும் என்பதால், அவை வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com