இங்கார்
இங்கார்

அடேங்கப்பா..! 1 மணிநேரத்தில் இவ்வளவு கப் டீ போடலாமா?

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இங்கார் என்ற பெண்மணி ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வுப்பர்தாலின் இங்கார் வாலண்டின் என்ற பெண்மணி கின்னஸ் சாதனைக்காக ஒரு மணி நேரத்தில் அதிகளவிலான தேநீர் தயாரிக்க விரும்பினார்.

இதற்காக அந்நாட்டின் பிரபலமான ரூயிபோஸ் தேநீர் என்கிற ஒருவகை சிவப்பு மூலிகை தேநீரை தயாரிக்க முடிவெடுத்தார். இதில் இந்த தேநீரின் ஒரிஜினல் மற்றும் வெனிலா, ஸ்ட்ராபெரி ஆகிய மூன்று வகை சுவைகளில் தேநீர் தயாரிக்க தீர்மானித்தார்.

குறைந்த நேரத்தில் அதிகளவு டீ தயாரிக்கும் கின்னஸ் சாதனையை படைக்க வேண்டுமானல், ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டிய சவாலை இங்கார் எதிர்கொண்டார்.

இதற்காக ஒரு கப்பில் 4 டீ- பேக்குகளை ஊறவைத்து 4 கப் தேநீரை ஒரே சமயத்தில் தயாரித்தார். அந்த வகையில் 1 மணி நேரத்தில் 250 கப் தேநீர் தயாரித்து முடித்தார் இங்கார். ஆனால், அதில் ஒரு கோப்பையில் தேநீர் அளவு குறைவாக இருந்ததால், அந்த கோப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் இங்கார் அதிகாரப்பூர்வமாக 1 மணிநேரத்தில்  249 கோப்பைகள் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். இதையடுத்து நெகிழ்ச்சியுடன் இங்கார் பேசியதாவது:

 ‘’கடந்த 2018-ம் ஆண்டு எங்கள் ஊரில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் எங்கள் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அழிவினால் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இந்த கின்னஸ் சாதனையை எங்கள் சமூகத்திற்காக நான் அர்ப்பணிக்கிறேன்’’  என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com