வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

ஒரே சமயத்தில் 32 பேருடன் பேசும் வசதி: வாட்ஸ்அப் அறிமுகம்!

Published on

வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேருடன் பேசுவதற்கான வீடியோ கால் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் வீடியோ கால் மட்டுமல்லாது, வெறும் குரல் வழியாக ஆடியோவில் மட்டும்  தொடர்பு கொண்டும் ஒரே சமயத்தில்  32 பேரிடம் பேசலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

 வாட்ஸப்பில் இதுதவிர மேலும் பல வசதிகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் வசதிகளைத் தவிர, 2 ஜிபி வரையிலான கோப்புகளை தங்களது குரூப்பில் இருக்கும் 1,024 சக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதுவரை வெறும் 16 எம்பி அளவிலான கோப்புகளை மட்டுமே பயனாளர்கள் பரிமாறிக் கொள்ளும் வசதி இருந்தது. தற்போது அது பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com