உலகம்
தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்த சத்தீஸ்வர் புஜாரா!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சத்தீஸ்வர் புஜாரா, தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்திய பிரதமரும், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாராவும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட புஜாரா, தனது 100வது டெஸ்ட்டுக்கு முன்னதாக பிரதமர் அவர்களை சந்தித்தில் பெருமை அடைவதாகவும், அவருடனான சந்திப்பு தனக்கு ஊக்கமளிப்பதாகவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,
"இன்று பூஜாவையும் உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100வது டெஸ்ட் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள்." என்று பிரதமர் மோடியும் ட்வீட் செய்துள்ளார்.