10,000 மீட்டர் ஆழத்திற்கு சீக்ரெட்டாக பூமியைத் துளையிட்ட சீனா.‌

10,000 மீட்டர் ஆழத்திற்கு சீக்ரெட்டாக பூமியைத் துளையிட்ட சீனா.‌

வ்வித அறிவிப்புகளும் இன்றி சைலண்டாக சீனா தற்போது பூமிக்கு அடியில் சுமார் 10,000 மீட்டர் ஆழத்திற்கு துளையிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சீனா அமைக்கும் இரண்டாவது மிகப்பெரிய துளை இதுவாகும். 

இந்த பூமியானது இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. நாம் விண்வெளியை ஆய்வு செய்ததில் 5 சதவீதம் கூட கடலை ஆய்வு செய்யவில்லை. பூமி குறித்து நாம் தெரிந்துகொள்ளும் புதிய விஷயங்கள் எப்போதும் நமக்கு மிகப்பெரிய வியப்பைக் கொடுப்பதாகவே இருந்துவருகிறது. 

பூமியில் இன்னும் எத்தனை மர்மங்கள் இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி சீனா நடத்தும் பூமி சார்ந்த ஆய்வு குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் மிக ஆழமான துளையை சீனா ஏற்படுத்தி வருகிறது. 34,000 அடி ஆழத்திற்கு பூமியைத் துளையிட உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு Shendi Chuanke 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவ்வளவு ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயுவின் தகவல்களைச் சேகரிக்க சீனா இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது‌. 

கடந்த மே மாதம் கூட ஜிஞ்சியாங்கில் கிட்டத்தட்ட இதே அளவுக்கான துளையையை சீனா அமைத்தது. இப்போது சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே அளவிலான இரண்டாவது துளையை அமைக்கத் தொடங்கியுள்ளனர். இது இயற்கை எரிவாயு தொடர்பான துளை என்று கூறப்பட்டாலும், மறுபுறம் பூமியின் உட்கட்டமைப்பை அறிந்து கொள்வதற்காக சீனா இந்த ஆய்வை செய்கிறது என சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது உண்மையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. 

320000 அடி ஆழ்துளை என்றதுமே இவ்வளவு ஆழமா என நீங்கள் ஷாக் ஆக வேண்டாம். ஏனென்றால் பூமியில் இருக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை, ரஷ்ய கோலா சூப்பர் டிப் போர்வெல் ஆகும். இதன் ஆழம் 40,230 அடி. 1970 இல் தொடங்கப்பட்ட இந்த பணி சுமார் 20 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com