குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க சீனா வகுத்துள்ள 'புதிய சகாப்த' திட்டங்கள்!

குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க சீனா வகுத்துள்ள 'புதிய சகாப்த' திட்டங்கள்!

சீனா 1980 முதல் 2015 வரை கடுமையான ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்தியது. கடந்த அறுபது ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் அதன் விரைவான முதுமை குறித்து கவலை கொண்ட சீன அரசின் அரசியல் ஆலோசகர்கள் மார்ச் மாதத்தில் நாட்டின் மக்கள்தொகையை மீண்டும் நிலைநிறுத்தும் பொருட்டு ஒற்றை மற்றும் திருமணமாகாத பெண்கள் எக் ஃப்ரீஸிங் (Egg freezing) மற்றும் IVF சிகிச்சையை அணுக வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

இவ்விதமாக, புதிய சகாப்தத்துக்கான திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கலாச்சாரத்தை உருவாக்க சீனா 20க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னோடித் திட்டங்களைத் தொடங்கும், இது குழந்தை பிறப்புக்கு உகந்ததொரு நட்பான சூழலை வளர்க்கும் என சீன அரசு நம்புகிறது. இது நாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு அதிகாரிகள் எடுத்த சமீபத்திய நடவடிக்கையாகும்.

இது தவிர, அரசாங்கத்தின் மக்கள்தொகை மற்றும் கருவுறுதல் நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஒரு தேசிய அமைப்பான சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு சங்கம், பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் திட்டங்களைத் தொடங்கும் என்றும் சீன ஆதரவு ஊடகங்கள் திங்களன்று தெரிவித்துள்ளன.

திருமணம் செய்வதை ஊக்குவித்தல், தகுந்த வயதில் குழந்தைகளைப் பெறுதல், குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள பெற்றோரை ஊக்குவித்தல் மற்றும் உயர் மணமகளுக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற காலாவதியான பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இத் திட்டங்களின் மையமாக உள்ளன என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த புதிய சகாப்த திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கலாச்சாரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நகரங்களில் உற்பத்தி மையமான குவாங்சோ மற்றும் சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஹண்டான் ஆகியவை அடங்கும். சங்கம் ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்ஜிங் உட்பட 20 நகரங்களில் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக ஊடகங்கள் கூறுகின்றன.

"சமுதாயம் இளைஞர்களுக்கு திருமணம் மற்றும் பிரசவம் பற்றிய கருத்தாக்கத்தில் வழிகாட்ட வேண்டும்" என்று சீனாவைச் சேர்ந்த மக்கள்தொகை ஆய்வாளர் ஹீ யாஃபு செய்தியாளர்களிடம் கூறினார்.

வரிச் சலுகைகள், வீட்டு மானியங்கள் மற்றும் மூன்றாவது குழந்தையைப் பெறுவதற்கான இலவச அல்லது மானியக் கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு மக்களைத் தூண்டக்கூடுமென சீன மாகாணங்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த திட்டங்களை வகுத்துள்ளன.

இந்தியாவை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாற்றிய பின் இப்போது சீனாவுக்கான சவால்களில் இந்த அருகி வரும் மக்கள் தொகையும் ஒன்றாகக் மாறி இருக்கிறது. எனவே அதன் குழந்தைப் பேற்று வரம்பானது தற்போது மூன்று குழந்தைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com