ரஷ்யத் தாக்குதலில் சீனத் தூதரகம் சேதம்!

தாக்குதல் உள்ளான சீனா தூதரகத்தின் முந்தைய படம்
தாக்குதல் உள்ளான சீனா தூதரகத்தின் முந்தைய படம்

ஷ்யப் படை தாக்கி சீனத் தூதரகம் சேதம் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால், இது நடந்திருப்பது சீனாவில் அல்ல!

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் கடந்த 500 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வார தொடக்கத்தில் ரஷ்யா வசம் உள்ள கிரீமியத் தீபகற்பத்தில் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில், இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடியாக ரஷ்யப் படைகள் நடத்தி வருகின்றன. இதனால் மீண்டும் ரஷ்யா உக்ரையின் இடையிலான போர் திவீரமடைந்துள்ளது. உக்ரைனின் உணவுதானிய ஏற்றுமதி மையமான ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக இரவுத் தாக்குதலை நடத்தியது. இன்னொரு துறைமுகமான மிகோலைவ் பகுதி மீதும் தாக்குதல் தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட படங்களில் கட்டடங்கள் தீ பற்றி எரிவதையும் பகுதி பகுதியாக சேதம் அடைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. ஒடேசா, மிகோலைவ் மீதான தாக்குதலில் 19 குரூய்ஸ் வகை ஏவுகணைகளும், 19 டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன என்று உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், குடியிருப்புகள் மட்டுமின்றி, கடைகள், உணவகங்கள், வங்கிகள் ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் இரவுவரை கட்டடங்கள் தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்தன என உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது.மீட்புப் படைகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணியில் ஈடுபட்டனர்.”ரஷ்ய பயங்கரவாதிகள் எங்கள் நாட்டின் வாழ்வை அழிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.” என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலையோடு கூறியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவுக்காகச் சண்டையிட்ட வாக்னர் கூலி இராணுவப் படை, பெலாரஸ் இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. போலந்து நாட்டு எல்லையில் உள்ள பிரெஸ்ட் நகரில் நேற்று முதல் கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது. வாக்னர் படையின் தலைவர் பிரிகோசின் எங்கிருக்கிறார், ரஷ்யப் படையால் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டாரா என்று மேற்குலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், பெலாரஸ் கூட்டுப் பயிற்சி குறித்து பிரிகோசின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகத்திலேயே இரண்டாவது வலுவான இராணுவமாக பெலாரசியப் படைகளை ஆக்க தாங்கள் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் சில மாதங்கள் பெலாரசில் வாக்னர் படைகள் தங்கியிருக்கும் என்றும் அவர் கூறினார்.பிரிகோசின் தற்போது பெலாரஸில் இருக்கக்கூடும் என்று இதன் மூலம் உறுதியாவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com