ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில்: சீன அதிபர் ஜி ஜின்பிங்!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், நடைபெறும் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்துப் பேசும்போது, சீனா மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல விமர்சனங்கள் வைத்ததாகவும், அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பதிலடி கொடுத்துப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில்தான் இருக்கும். மனிதநேயத்தின் அங்கங்களான சுதந்திரம், மனிதாபிமானம் ஆகியவையே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அதற்கேற்பவே சீனாவின் ஜனநாயகம் உள்ளது.

அமெரிக்கா அப்படி அதன் பாணியில் உள்ளதோ, அதேபோல சீனாவும் தன் பாணியில் தான் இருக்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுவதால் சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக உள்ளது என்று கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் பைடன்,  உலகளவில் 100 தலைவர்களை திரட்டி இணையவழியில் நடத்திய ஒரு மாநாட்டில் பேசினார்.

மேலும்  மேலும் சீன ஜனநாயகத்தை தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com