அத்துமீறிய முத்தம்; தலாய்லாமாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அத்துமீறிய முத்தம்; தலாய்லாமாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

திபெத்திய ஆன்மிகத் தலைவராக விளங்கி வருகிறார் தலாய்லாமா. இவர் சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தமிடுவதும், அவர் தனது நாக்கை நீட்டி அதில் அந்த சிறுவனிடம் முத்தமிடச் சொல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் தனது காலில் விழுந்த ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா, பின்னர் தனது நாக்கை நீட்டி அந்த சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார். ஆன்மிகத் தலைவராக விளங்கிவரும் தலாய்லாமாவின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் கூட, 2019ம் ஆண்டு, ’தனக்கு அடுத்து வரும் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும்’ என தலாய்லாமா கூறி இருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.  அதற்குப் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்த நிலையில், தான் அப்படி கூறியதற்காக தலாய்லாமா மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், தலாய்லாமாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரிடையே இருந்தும் கடும் கண்டங்கள் வலுத்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com