சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் ஊரடங்கு அமல்!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் ஊரடங்கு அமல்!

சீனாவில் ஊகான் மற்றும் ஷாங்காய் ஆகிய நகர்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது

சீனாவில் ஷாங்காயில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு 'பூஜ்ய கொரோனா தொற்று விளைவு' (Zero Covid policy ) கொள்கையை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் இப்போது அங்கு அதிகரித்து வரும் கொரோனாவைத் தடுக்க நாட்டின் பல பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.  

மேலும் இப்படிப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கால், சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் சரிந்துள்ளாக கூறப்படுகிறது. சீனசவில் 3-வது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜி ஜின்பிங், சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த கொரோனா  கட்டுப்பாடு விதிகளில் தளர்வுகள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், சீனாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளதால், சீன அரசு தனது கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கி இருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com