கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது; சீனா திட்டவட்டம்!

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது; சீனா திட்டவட்டம்!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து பல்வேறு மாகாணங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து ஜின்பிங் தலைமையிலான அந்நாட்டு தீவிர கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளது.  

நாட்டில் கடும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிகப் படுகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் உரும்கி நகரில் ஊடரங்கு கட்டுப்பாட்டினால் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை விரைவில் அணைக்க முடியாமல் 10 பேர் பலியாகினர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு எதிராக உரும்கியில் தொடங்கிய போராட்டம் பீஜிங், ஷாங்காய், குவாங்ஜோ உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. ஜின்பிங் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், கொரோனா கட்டுப்பாட்டை தளர்த்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘’உரும்கி நகரில் ஏற்பட்ட தீ விபத்தை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுடன் தொடர்பு படுத்தி சில விஷமிகள் உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் போராட்டங்கள் எவ்வளவு தீவிரமடைந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது,'' என்று தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com