கொலை வழக்கில் சிக்கிய முதலை,  என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

கொலை வழக்கில் சிக்கிய முதலை, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

ரு முதலையின் வயிற்றில் மனித உடல் இருந்த சம்பவம் ஆஸ்திரேலியா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சாதாரணமாகவே கொலை வழக்குகளில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஈடுபடுபவர்கள். சில வழக்குகளில் அந்த குற்றப் பின்னணி கொண்டவர்களை போலீசார் என்கவுண்டரில் சுடடுக் கொன்று விடுவார்கள். ஆனால் ஒரு வினோதமான சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியுள்ளது. ஒரு முதலை கொலை வழக்கில் சிக்கியது. அதை என்கவுண்டரிலும் போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். 

ஆஸ்திரேலியாவில் உப்பு தண்ணீர் கொண்ட ஒரு ஆற்றில் ஒருவர் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஓர் அலறல் சத்தம் கேட்டது. மீன் பிடித்துக் கொண்டிருந்த நபரைக் காணவில்லை. சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை எங்கு தேடிப் பார்த்தும் ஆளைக் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விடுகிறார்கள். 

எங்கு தேடியும் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபரை கண்டுபிடிக்க முடியாததால், அவர் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். இது எடுத்து உடனடியாக அந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், அலறல் சத்தம் கேட்டு சமயத்தில் புதிய நபர்கள் யாரும் கொலை செய்யும் நோக்கத்தில் அந்த பகுதிக்கு வந்ததுபோல் தெரியவில்லை. நிலப்பரப்பில் எங்கு தேடியும் எந்த தடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் பயன்படுத்திய தூண்டில் மட்டும் அங்கேயே இருக்கிறது. 

உடனே போலீசாருக்கு இன்னொரு சந்தேகம் ஏற்பட்டது. நிலப்பரப்பில் தடயங்கள் இல்லை என்றால் ஆறு வழியாகத்தான் யாராவது வந்து இவரைக் கொன்றிருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகின்றனர். ஆறு வழியாக யாராவது வந்திருக்கிறார்களா, ஏதேனும் படகு இவரைக் கடந்து சென்றிருக்கிறதா என்று சிசிடிவி கேமராவில் பார்த்தபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் அதில் பதிவாகவில்லை. 

ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆளைக் காணவில்லை. சிசிடிவி கேமராவிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை என்று குழம்பிய போலீசார், அப்படியானால் ஆற்றுக்குள்ளே இருந்து தான் ஏதாவது இவரைத் தாக்கி இருக்க வேண்டும் என எண்ணி, ஆற்றுக்குள்ளே தேட ஆரம்பித்தனர். அப்படி தேடும்போது, சம்பவம் நடந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு முதலைகள் மட்டுமே ஆற்றுக்குள் தென்பட்டுள்ளது. இந்த முதலைகள் ஒவ்வொன்றும் 4.1 மீட்டர் மற்றும் 2.8 மீட்டர் நீளம் கொண்ட பெரிய முதலைகள். 

ஒரு வேளை, முதலை அவரைக் கொன்று சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முதலையை முதலைகள் செய்ய, போலீசார் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து இரு முதலைகளையும் சுட்டு என்கவுண்டர் செய்துவிட்டனர். அந்த இரண்டு முதலைகளையும் பிறகு கரைக்கு எடுத்து வந்து அவற்றின் வயிற்றுப் பகுதியை அறுத்து பார்க்கும்போது, இரண்டு முறைகளில் ஒரு முதலையின் வயிற்றில் ஒரு ஆண் சடலம் இருக்கிறது. 

என்னதான் முதலை வயிற்றில் ஒரு ஆண் சடலம் இருந்தாலும், அது உண்மையிலேயே காணாமல் போனதாக சொல்லப்படும் நபர்தானா என்பதை சோதித்துப் பார்க்க தடவியல் நிபுணர்கள் அங்கே கொண்டுவரப்பட்டு டிஎன்ஏ பரிசோதனையில் போலீசார் இறங்கி இருக்கின்றனர். முதலை வயிற்றில் மனித உடல் இருந்த இந்த சம்பவம் ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com