120 வது பிறந்தநாளை கொண்டாடிய முதலை!

120 வது பிறந்தநாளை கொண்டாடிய முதலை!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரீன் தீவு. இங்குள்ள மரைன்லேண்ட் முதலைப் பூங்காவில் வசிக்கும் உலகின் மிகப்பெரிய முதலையான காசியஸ், இந்த வாரம் தனது 120வது பிறந்தநாளை கொண்டாடியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 18 அடி நீளமுள்ள உப்புநீர் ராட்சத பூங்காவில் 1987 முதல் இந்த முதலை வாழ்ந்து வருகிறது.

காசியஸ் முதலையானது, கின்னஸ் உலக சாதனைகளின்படி உலகின் மிகப்பெரிய முதலை என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கிறது.

தனது பிறந்த நாளைக் கொண்டாடும் போது, காசியஸுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அமைந்தது பிறந்தநாள் விருந்து தான். காசியஸுக்கு கோழி மற்றும் டுனா மீன்கள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள் பூங்காவிலிருக்கும் அதன் பராமரிப்பாளர்கள்.

உலகின் மிக வயதானதெனக் கருதப்படும் இந்த பழம்பெரும் முதலை 16 அடி 10 அங்குல நீளத்துடன் காட்சியளிக்கிறது. வால் மட்டுமே குறைந்த பட்சம் 6 அங்குல நீளம் கொண்டதாகக் காணப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபின்னிஸ் ஆற்றில் காசியஸ் பிடிபட்டபோது அதற்க்கு 30 முதல் 80 வயது இருக்கும் என முதலை ஆராய்ச்சியாளரான கிரேம் வெப் கூறுகிறார்.

ஆக, இப்போது அதன் வயது ஒரு நூற்றாண்டுக்கு மேல் இருக்கலாம் , அதாவது 120 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

டூடி ஸ்காட், 1987 ஆம் ஆண்டில் காசியஸ் முதலையை கிரீன் தீவுக்கு அழைத்து வந்தது இவரது தாத்தா தான் என்கிறார்கள். அவரது மதிப்பீட்டின் அடிப்படையில் முதலைக்கு இப்போது சுமார் 120 வயது இருக்கலாம் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

இந்த 120 வயதிலும் கூட, காசியஸ் "மிகத் துடிப்புடன்" இருப்பதாகக் கூறுகிறார் ஸ்காட். பூங்காவைப் பொருத்தவரை ஈர்க்கக்கூடியதாக இருப்பது காசியஸின் இருப்பு தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனெனில்,"பொதுவாக, வருடங்கள் செல்லச் செல்ல பெரியதான பழைய ஊர்வன விலங்குகள் மிகவும் அடக்கமாகவும், அமைதியாகவும், எதிலும் ஆர்வமற்றதாகவும் ஒரு வித பற்றற்ற விலங்கினமாகவே இருக்கும். ஆனால், காசியஸ் எப்போதும் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுடன் தொடர்பு கொள்ள தயாராக இருக்கிறார். அவர் எங்களின் உயிர்ப்பான முதலைகளில் ஒருவர் என்பதோடு அனைவரையும் மிகவும் ஈர்க்கக்கூடியவராகவும் உள்ளார்.

யாரைப்பார்த்தாலும் ஒளிரும் அவரது கண்களின் ஒளியிலிருந்தே நாம் அதை உணரலாம் என்கிறார் ஸ்காட்.

இதுவரையில் காசியஸ் சந்தித்ததில் பெரிய விவிஐபி பார்வையாளர்களென மறைந்த ராணி எலிசபெத் II, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தாய்லாந்து மன்னர் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் உட்பட சிலரைக் கூறலாம்.

120 வயது என்பது மிக அதிசயமான விஷயம் எனும் போது, உலகின் பழம்பெரும் முதலை காசியஸுக்கு நாமும் தான் சொல்வோமே ‘ஹேப்பி பர்த்டே டியூட்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com